CENTRE FOR MONOGENIC DIABETES' INAUGURATED AT DR. MOHAN'S DIABETES SPECIALITIES CENTRE    |    Westminster-Cipaca Join Hands to Start COVID -ICU Unit    |    VIJAI TRUCKING HAS BEEN AWARDED THE DEALERSHIP FOR TATA MOTORS COMMERICAIL VEHICLE DIVISION    |    SIMS Hospitals, Vadapalani performs successful Microsurgical Liver Transplant Surgery, a first of its kind in Tamil Nadu    |    Malabar Gold & Diamonds opens New Show Room In Chennai Anna Nagar.    |    TCL CONNECT 2021 , Chennai    |    Satish Dhawan satellite launched by ISRO onboard the PSLV-C51 rocket    |    ‘ONVI.MOVIE’, India’s Exclusively Pay-Per-View OTT for Movies, will be Launched on 5th March 2021    |    ஒருலட்சம் உயிர்களை காப்பாற்றி சிறப்பாக சாதனை -பாராட்டிய ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை    |    தாம்பரம் முடிச்சூர் , அருள்மிகு வினை தீர்த்த விநாயகர் கோவில், பிரசன்ன வெங்கடேசப் பொருமாள் - கும்பாபிஷேகம்    |   
Total Visitors : site stats
Apr 27, 2013     |     GO BACK     |     Share
 
 
நிலக்கரி சுரங்க ஊழல் புகார் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் விசாரணை அறிக்கை மூலம் தெரிய வந்து உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நிலக்கரி இலாகா இருந்த போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு நடந்ததால், நடந்த முறைகேட்டுக்கு பொறுப்பு ஏற்று அவர் பதவி விலகவேண்டும் என்று பாரதீய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.மேலும், நிலக்கரி சுரங்க ஊழல் பற்றிய விசாரணை அறிக்கையில், சட்ட மந்திரி அஸ்வினி குமாரின் தலையீடு பற்றி சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவித்து இருப்பதால் அவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்துகின்றன. நிராகரிப்பு ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்து உள்ளார். டெல்லியில் நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அவர் நிராகரித்தார்.எதிர்க்கட்சிகளின் கோரிக்கை பற்றி நிருபர்கள் கேட்டதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது: புதிது அல்ல அவர்களுடைய இந்த கோரிக்கை புதிது அல்ல. கடந்த 9 ஆண்டுகளாக, நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். பலதடவை இதே கோரிக்கையை விடுத்து இருக்கிறார்கள். பாராளுமன்றம் சுமுகமாக நடைபெற ஒத்துழைக்குமாறு அவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.பாராளுமன்றத்தை செயல்பட விடாமல் தடுப்பதன் மூலம் நமது ஜனநாயக முறையை நாம் கேலிக்கூத்து ஆக்குகிறோம். இதனால் இந்த உலகமே நம்மைப் பார்த்து சிரிக்கிறது. எந்த பிரச்சினை என்றாலும் பாராளுமன்றத்தில் முறைப்படி விவாதம் நடத்தி முடிவு எடுக்க முடியும். ராஜினாமா செய்யமாட்டார் சட்ட மந்திரி ராஜினாமா செய்வாரா? என்று கேட்கிறீர்கள். அவரும் பதவி விலகும் பேச்சுக்கே இடம் இல்லை. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் என்னை பாதுகாத்துக் கொள்ள சட்ட மந்திரியை நான் கேடயமாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சி கூறும் குற்றச்சாட்டு பற்றி கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் அதுபற்றி பேசுவது சரியாக இருக்காது.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். சீன ராணுவம் ஊடுருவல் பேட்டியின் போது, காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி இருப்பது பற்றி நிருபர்கள் குறிப்பிட்டு, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசிடம் ஏதாவது திட்டம் உள்ளதா? என்று கேட்டனர்.அதற்கு மன்மோகன் சிங் பதில் அளிக்கையில்: அங்குள்ள சூழ்நிலையை நாங்கள் பெரிதுபடுத்த விரும்பவில்லை. நம்மிடம் ஒரு திட்டம் உள்ளது. தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என நம்புகிறேன் என்றார்.இந்த விவகாரம் (ஊடுருவல்) அந்த பகுதியில் உள்ள ஒரு பிரச்சினை என்றும், அதற்கு தீர்வு காண பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாக தான் கருதுவதாகவும் அவர் கூறினார். சரப்ஜித் சிங் மீது தாக்குதல் பாகிஸ்தானில் லாகூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இந்தியர் சரப்ஜித் சிங் தாக்கப்பட்டது பற்றி மன்மோகன் சிங்கிடம் கருத்து கேட்கப்பட்டது.அதற்கு அவர் பதில் அளிக்கையில்; இது மிகவும் துயரமான சம்பவம், சிறையில் சில கைதிகள் அவரை தாக்கியதாக நினைக்கிறேன். இது மிகவும் வருந்தத்தக்கது என்று கூறினார்.