CENTRE FOR MONOGENIC DIABETES' INAUGURATED AT DR. MOHAN'S DIABETES SPECIALITIES CENTRE    |    Westminster-Cipaca Join Hands to Start COVID -ICU Unit    |    VIJAI TRUCKING HAS BEEN AWARDED THE DEALERSHIP FOR TATA MOTORS COMMERICAIL VEHICLE DIVISION    |    SIMS Hospitals, Vadapalani performs successful Microsurgical Liver Transplant Surgery, a first of its kind in Tamil Nadu    |    Malabar Gold & Diamonds opens New Show Room In Chennai Anna Nagar.    |    TCL CONNECT 2021 , Chennai    |    Satish Dhawan satellite launched by ISRO onboard the PSLV-C51 rocket    |    ‘ONVI.MOVIE’, India’s Exclusively Pay-Per-View OTT for Movies, will be Launched on 5th March 2021    |    ஒருலட்சம் உயிர்களை காப்பாற்றி சிறப்பாக சாதனை -பாராட்டிய ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை    |    தாம்பரம் முடிச்சூர் , அருள்மிகு வினை தீர்த்த விநாயகர் கோவில், பிரசன்ன வெங்கடேசப் பொருமாள் - கும்பாபிஷேகம்    |   
Total Visitors : site stats
Apr 27, 2013     |     GO BACK     |     Share
 
 
கர்நாடக மக்களை பா.ஜனதா அரசு ஏமாற்றி விட்டது என்று சிக்மகளூரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் சோனியாகாந்தி ஆவேசமாக பேசினார். சோனியாகாந்தி வருகை கர்நாடக மாநிலத்தில் வருகிற 5ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே ராகுல்காந்தி 2 கட்ட பிரசாரத்தை முடித்து சென்றுள்ளார்.இந்த நிலையில் சிக்மகளூர் மாவட்டத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய நேற்று பகலில் மங்களூருக்கு தனி விமானம் மூலம் அகில இந்தி காங்கிரஸ் கட்சி தலைவி சோனியாகாந்தி வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்மகளூர் சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்திற்கு அவர் மதியம் 1.30 மணிக்கு வந்திறங்கினார். பொதுக்கூட்டத்தில் பேச்சு அவரை, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் பரமேஸ்வர், சிக்மகளூர்உடுப்பி தொகுதி எம்.பி. ஜெயப்பிரகாஷ் ஹெக்டே, மாவட்ட தலைவர் எம்.எல்.மூர்த்தி ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதைத்தொடர்ந்து அங்கு நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், சோனியாகாந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:சிக்மகளூர் மாவட்டம் மக்களுக்கும், எங்கள் குடும்பத்துக்கும் சுமார் 35 ஆண்டு காலமாக நட்புறவு உள்ளது. கடந்த 1978ம் ஆண்டில் சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்ட எனது அத்தை இந்திராகாந்திக்கு மறுவாழ்வு கொடுத்தவர்கள் சிக்மகளூர் மக்கள். அந்த மக்களை நாங்கள் எப்போதும் மறக்கமாட்டோம். கடந்த ஆண்டு நடந்த சிக்மகளூர்உடுப்பி பாராளுமன்ற இடைத்தேர்தலில் ஜெயப்பிரகாஷ் ஹெக்டேவை எம்.பி.யாக தேர்வு செய்தீர்கள். பா.ஜனதாவை ஒதுக்க வேண்டும் அதேபோல் சிக்மகளூர் மாவட்டத்தில் தற்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். அதோடு கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மலர வாய்ப்பு அளிக்க கேட்டுக்கொள்கிறேன்.கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு மக்களுக்கு எந்த விதமான நலத்திட்டப் பணிகளையும் செய்யாமல், விவசாயிகள் முதல் அனைத்து மக்களுக்கும் துரோகம் செய்துள்ளது. அளவுக்கு அதிகமாக கனிமவளம் மற்றும் நில அபகரிப்பு ஊழலில் சிக்கியுள்ள பா.ஜனதா அரசை மக்கள் ஒதுக்கித்தள்ள வேண்டும். கர்நாடகத்தில் தொழில் மற்றும் வேலை வாய்ப்பு முடங்குவதற்கு, பா.ஜனதா அரசின் திறமையற்ற நிர்வாகமே காரணமாகும். இதுபோன்ற ஊழல் செய்தவர்களை மீண்டும் மக்கள் தேர்வு செய்யக் கூடாது. கடூர்சிக்மகளூர் ரெயில்வே திட்டம் கர்நாடக மாநிலத்திற்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியது. அந்த திட்டங்களை மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தாமல், பா.ஜனதா அரசு ஊழல் செய்துள்ளது. சிக்மகளூர் மாவட்டத்தில் மஞ்சள் இலை நோயால் பாதிக்கப்பட்ட பாக்கு தோட்ட விவசாயிகளுக்கு, வங்கி கடனை ரத்து செய்ய விரைவில் பாராளுமன்றத்தில் பேசி முடிவு செய்யப்படும்.கடந்த 1978ம் ஆண்டு மறைந்த பிரதமர் இந்திரகாந்தி கடூரில் இருந்து சிக்மகளூர் வரை ரெயில் போக்குவரத்தை உருவாக்கி கொடுப்பதாக உறுதி அளித்தார். இந்த ரெயில்வே திட்டத்திற்கான அனைத்து வேலைகளும் நிறைவடைந்துள்ளன. விரைவில் கடூர்சிக்மகளூர் வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும். தொழில் வளம் பெருக்குவோம் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மீண்டும் மாநிலம் முழுவதும் தொழில் வளம் பெருகவும், பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகள் அதிகளவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடக மாநில மக்களுக்கு மத்திய அரசு மூலம் பல்வேறு நலத்திட்டங்களை நான் செய்து கொடுத்துள்ளேன் என்பதற்கு இங்கே சத்தியம் செய்கிறேன். ஆனால் மாநில அரசு அதை சரியாக செய்யவில்லை.கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி காலம் இளைஞர்களுக்கு இருண்ட காலம் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். தற்போது மாற்றம் தேவை. உங்களின் எதிர்பார்ப்புகளை பா.ஜனதா அரசு முழுவதுமாக புறக்கணித்துவிட்டது. மாநிலத்தில் சட்டம்ஒழுங்கு கெட்டுவிட்டது. சுரங்க கொள்ளை சுரங்க கொள்ளை கும்பல், கர்நாடகத்தின் சுற்றுச்சூழலை அழித்துவிட்டது. பா.ஜனதா அரசு குறுகிய நோக்கத்துடன் சுயநல அரசியல் செய்துள்ளது. ஒரு காலத்தில் கர்நாடகத்தில் தொழில் தொடங்குவதில் கடும் போட்டி இருந்தது.ஆனால் தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது. அரசின் தலையீடு, ஊழல், கட்டமைப்பு பிரச்சினைகளால் தொழில் நிறுவனங்கள் கர்நாடகத்தை விட்டு வெளியேறி வருகின்றன. கர்நாடகம் கடந்த காலத்தில் சிறப்பு வாய்ந்த புகழை பெற்று இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. ஆனால் கர்நாடகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. அதற்கு இங்கு உறுதியான அரசு வேண்டும். அது இருந்தால் தான் அது சாத்தியமாகும். வளர்ச்சி பாதையில்... கர்நாடகத்திற்கு உறுதியான, பலமான அரசு தேவைப்படுகிறது. கர்நாடகத்தை நாட்டின் ஒளிமயமான மாநிலம் என்று மாற்றுவது தான் காங்கிரஸ் கட்சியின் உடனடி திட்டமாகும். இந்த மாநிலத்தை வளர்ச்சி பாதையில் நிலை நிறுத்த காங்கிரஸ் உரிய நடவடிக்கையை எடுக்கும். அதனால் காங்கிரஸ் கட்சிக்கு மாநில மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு சோனியாகாந்தி பேசினார். 2 அடுக்கு பாதுகாப்பு கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் அம்பிகா சோனி, மேல்சபை உறுப்பினர் மோட்டம்மா, காங்கிரஸ் வேட்பாளர்கள் சிக்மகளூர் தொகுதி சாந்தேகவுடா, சிருங்கேரி தொகுதி ராஜேகவுடா, மூடிகெரே தொகுதி சந்திரப்பா, கடூர் தொகுதி மல்லிகார்ஜுனா, தரிகெரே தொகுதி சீனிவாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.தேர்தல் விதிமுறைகளை கருத்தில் கொண்டு கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்களுக்கு குடிநீர் பாக்கெட்டுகள் கூட வழங்கப்படவில்லை. இதனால் பெரியோர்களும், பெண்களும், சிறுவர்களும் சோர்வாக காணப்பட்டனர். சோனியாகாந்தி வருகையை முன்னிட்டு சிக்மகளூர் முழுவதும் மேற்குமண்டல போலீஸ் ஐ.ஜி. பிரதாப் ரெட்டி தலைமையில் 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.