CENTRE FOR MONOGENIC DIABETES' INAUGURATED AT DR. MOHAN'S DIABETES SPECIALITIES CENTRE    |    Westminster-Cipaca Join Hands to Start COVID -ICU Unit    |    VIJAI TRUCKING HAS BEEN AWARDED THE DEALERSHIP FOR TATA MOTORS COMMERICAIL VEHICLE DIVISION    |    SIMS Hospitals, Vadapalani performs successful Microsurgical Liver Transplant Surgery, a first of its kind in Tamil Nadu    |    Malabar Gold & Diamonds opens New Show Room In Chennai Anna Nagar.    |    TCL CONNECT 2021 , Chennai    |    Satish Dhawan satellite launched by ISRO onboard the PSLV-C51 rocket    |    ‘ONVI.MOVIE’, India’s Exclusively Pay-Per-View OTT for Movies, will be Launched on 5th March 2021    |    ஒருலட்சம் உயிர்களை காப்பாற்றி சிறப்பாக சாதனை -பாராட்டிய ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை    |    தாம்பரம் முடிச்சூர் , அருள்மிகு வினை தீர்த்த விநாயகர் கோவில், பிரசன்ன வெங்கடேசப் பொருமாள் - கும்பாபிஷேகம்    |   
Total Visitors : site stats
Apr 26, 2013     |     GO BACK     |     Share
 
 
பாகிஸ்தானில் கடந்த 1990ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 14 பேர் இறந்தனர். இதுதொடர்பாக சரப்ஜித் சிங் என்ற இந்தியரை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். குண்டு வெடிப்பில் சரப்ஜித்திற்கு தொடர்பு இருப்பதாக ஆவணங்களையும் சாட்சியங்களையும் பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த பாகிஸ்தான் கோர்ட்டு சரப்ஜித் சிங்கிற்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யும்படி பாகிஸ்தான் உச்சநீதி மன்றத்தில் சரப்ஜித் சிங் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அவரது கருணை மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்படுகின்றன. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பர்வேஸ் முஷரப்புக்கு அவர் அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது. தற்போதைய அதிபர் சர்தாரிக்கும் கருணை மனு அனுப்பியுள்ளார். இதற்கிடையே லாகூர் சிறையில் அவருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளதால் அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் வலியுறுத்தினார். இந்திய தூதரகமும் இதுபற்றி பேசி, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஆனாலும், சிறையில் அவரது பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று லாகூர் சிறையில் உள்ள சரப்ஜித் சிங்கை, மற்றொரு கைதி கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த சரப்ஜித் சிங், ஜின்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடவில்லை. பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்று இந்திய தூதரக அதிகாரிகளும் கூறியுள்ளனர். இச்சம்பவத்தால் சரப்ஜித் சிங் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.